sweet nothings

கண்ணாடி என்பதற்கு
அர்த்தம் கேட்டாய்
கண்கள் என்றேன் - மறுத்து விட்டு
கவிதை என்றாய்
பூக்களுக்கு வேறு பெயர் கேட்டாய்
உன் புன்னகை என்றேன்
தவறென்று தலையாட்டி - புல்லின் மேல்
பனித்துளி என்றாய்
வெட்கத்திற்கு எதிர்ச்சொல் கேட்டாய்
நீ என்றேன்...
அடித்து விட்டாய்!
முத்தத்திற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...?
தெரியாது என்றேன்!
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய்க் கேட்டாய்...
"கற்றுத் தரவா?" என்று.
Categories: காதலி
11 Comments:
test
thank you..:)
அருமையான கவிதை கோகுல்.
கோகுல்,
//முத்தத்திற்கு விளக்கம் கேட்டாய்
எனக்கெதற்கு வம்பு...?
தெரியாது என்றேன்!
வெட்கத்தோடு தலை குனிந்து
வேகமாய்க் கேட்டாய்...
"கற்றுத் தரவா?" என்று.//
யாருங்க கோகுல்?
பின்றாம்பா...பின்றாம்பா...note பன்னுங்கடா டேய்...note பன்னுங்கடா
நீங்கள் உடனே வேகமாய்,
"கற்றுத் தர வா" என்றுதானே சொன்னீர்கள் ? :-)))
அருமை!!!
http://enuyiree.blogspot.com/ intha gokul niingkala?
http://enuyiree.blogspot.com/ intha gokul niingkala?
அனைத்து கவிதை தொகுப்புகளும் மிகவும் அருமை..
அனைவருக்கும் நன்றி.. zo வுக்கு அந்த கோகுல் நானில்லை..
Post a Comment
<< Home