Sunday, April 23, 2006

தருணங்கள்



எனக்கு முதுகு காட்டியபடி நடக்கிறவன்...
அது நீயாகத்தான் இருக்க வேண்டும்!
வேகமாக ஓடிவந்து தொடும் என்னை
வினோதமாகப் பார்த்துக் கொண்டே
விலகுகிறான் அந்த இளைஞன்!

உன்னுடனான நிறைய சந்தோஷங்கள்
இன்னமும் நினைவிருக்கின்றன,
ஒரேயொரு கவலை தான்...
மூளைக்குள் உன் முகம்
முற்றிலுமழிந்து பெயர் மட்டுமே
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

கடைசியாக நாம் பேசிப்பிரிந்த
அந்த மாலைப் பொழுதில்,
நான் உன்னை இன்னும் கொஞ்சம்
உற்று நோக்கியிருக்க வேண்டும்

Categories:


Tell-a-Friend©
>

2 Comments:

Blogger நிலவு நண்பன் said...

கவிதை அழகாய் வந்திருக்கிறது நண்பா..

என்னவோய்..? நமக்கு போட்டியா நிலா நதின்னு பேர் வச்சிட்டீங்களா.. :)

7:59 PM  
Blogger Gokul Kumar said...

அய்யய்யோ இது ஜஸ்ட் தற்செயலாய் நிகழ்ந்தது நண்பா

7:23 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home