காதல் மொழி

அந்த சில மணித்துளிகளில்…
அழகிகளும், கவிஞர்களும் பிறக்கிறார்கள்
இறப்பவர்கள் சொர்க்கம் சேர்கிறார்கள்
உலகம் எவ்வளவு இருளிலிருப்பினும்
லேசான அதீத வெளிச்சம் பரவுகிறது
ஏதோ அற்புதம் நிகழ்வதாய்
நிறைய பேர் உணருவார்கள்
பூக்களும், குழந்தைகளும்
மேக்-அப் பூசிக்கொள்ளும்
சாக்கடை, சிகரெட் நாற்றங்களை
புமி பிரபஞ்சத்தில் துப்புகிறது
எல்லா தேவதைகளும் நம்மை சுற்றி
ஒளிந்திருந்து ஒட்டு கேட்கிறார்கள்
என்னிடம் நீ பேசும் அந்த சில
மணித்துளிகளில்..
Categories: காதலி
0 Comments:
Post a Comment
<< Home