தயக்கம்

என்னுடைய
முடிவில்லாத காதலின்
தொடக்கமாய்
நீ பேச ஆரம்பிக்கிறாய்...
எத்தனை எத்தனையோ
வண்ணங்களை
உன் இதழிலும், கையசைவிலும்
என் மேல் தெளிக்கிறாய்
வியர்த்து சலித்திருக்கும்போது
வீசும் மெல்லிய தென்றல் போல
அவ்வப்போது உன் பேச்சில்
என் மனதையும் வசீகரிக்கிறாய்
இன்னமும் ஆரம்பிக்காத
உன் காதலின் முடிவிலியாய்...
நான் மௌனமாகவே இருக்கிறேன்
Categories: காதலி
3 Comments:
அருமையான வரிகள் தோழா,
இன்னும் ஆரம்பிக்காத காதலைவிட, ஆரம்பித்து இடையில் இடர்பட்டிருக்கும் காதல் போலவே இது மௌனமானது...:)
ஸ்ரீஷிவ்..:)
நன்றி ஸ்ரீஷிவ்
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home