ரகசிய நதி

நாமிருவரும் நல்ல நண்பர்களென்று
ஏறத்தாழ எல்லோருமே
ஞாபகப்படுத்தினார்கள்
அப்போது மழையுமில்லை – அது
இரவுமில்லை…
எந்தக்காரணியுமின்றியே…
மிக எதேச்சையாக
நாம் உரசினோம்
தொடுதலின் சிறந்த பரிமாணத்தை
உன் விரல்கள் எனக்கு விளக்கின
பெண்மையின் அழகிய பரிசை
கேட்காமலே எடுத்துக்கொண்டாய்
திரும்பவும் பல நாட்களுக்கு
ஏனோ சொல்லிக்கொண்டோம்…
நாமிருவரும் நல்ல நண்பர்களென்று
Categories: காமம்
0 Comments:
Post a Comment
<< Home