Wednesday, May 31, 2006

காதல் பொழி


லேசாக மழை தூற ஆரம்பித்திருந்தது
சாத்திய கதவைத் திறக்கச்சொல்லி
ஏதோ உரிமையோடு ஜன்னலைத் தட்டுகிறது…
சூறாவளிக்காற்று

மழைத்துளி சப்தம்
உன் பேச்சை நினைவுபடுத்தியது
நீ ஊர் வரும்போதெல்லாம்
இலவச இணைப்பாகக் கிடைக்கும்…
இனிப்பான முத்தம்
குளிரை மறைத்து விடும்…
வெதுவெதுப்பான உன் பேச்சு

மழை இப்போது…
அடைமழையாகியிருந்தது.


Categories:


Tell-a-Friend©
>

0 Comments:

Post a Comment

<< Home